Foot Ball

மெஸ்ஸி அபாரம்: வெற்றியுடன் முதலிடம் பிடித்தது பார்சிலோனா.!!! மீண்டும் தடுமாறும் ரியல் மாட்ரிட்.!!!

மெஸ்ஸி அபாரம்: வெற்றியுடன் முதலிடம் பிடித்தது பார்சிலோனா.!!! மீண்டும் தடுமாறும் ரியல் மாட்ரிட்.!!!

லா லிகா தொடரில் 3 ஆவது வாரத்துக்கான போட்டிகளில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றுள்ளது.

பார்சிலோனா மற்றும் ஸ்பானியோல் அணிகளுக்கிடையிலான போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா 5-0 என அபார வெற்றி பெற்றுள்ளது. பார்சிலோனா சார்பில் அபாரமாக ஆடிய மெஸ்ஸி ஹட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அத்துடன் சுவாரஸ் மற்றும் பிகே ஆகியோரும் தமது பங்குக்கு ஒரு கோல் அடித்தனர்.

ரியல் மாட்ரிட் மற்றும் லெவன்ரே அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. சென்றவாரப் போட்டியையும் சமநிலை செய்திருந்த ரியல் மாட்ரிட் இவ்வாரப் போட்டியையும் சமநிலை செய்து அதிர்ச்சியளித்துள்ளது.

3 ஆவது வார போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதுவரை புள்ளிபட்டியலில் பார்சிலோனா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.