India

மீள்வரவை வலுவாக நிரூபித்தார் திரிமான்ன, பந்துவீச்சில் அசத்தினார் பூம்ரா.

மீள்வரவை வலுவாக நிரூபித்தார் திரிமான்ன, பந்துவீச்சில் அசத்தினார் பூம்ரா.

கண்டி , பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணி சார்பில் 2016 ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னர் அணிக்கு திரும்பிய திரிமான்ன அதிகபட்சமாக 80 ஓட்டங்களும், சந்திமால் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா 5 விக்கெட்டுகளையும், பாண்டியா, கேதர் ஜாதவ், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முதலிரு போட்டிகளையும் வெற்றிகொண்ட இந்தியாவுக்கு 218 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.